லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புளியரை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரையில் உள்ள வாகன போக்குவரத்து சோதனை சாவடி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.