லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா
சின்னசேலத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா
சின்னசேலம்
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சின்னசேலம் பாரத் கியாஸ் ஏஜென்சி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா புனித சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமை தாங்கினார். சின்னசேலம் பாரத் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஜெயவேல் கலந்துகொண்டு லஞ்சமற்ற நிர்வாக செயல்பாடு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் கலந்து கொண்ட சிறந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள், பாரத் கியாஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.