லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

சீர்காழியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-05-03 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பாபு தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டு வக்கீல் விஜயரங்கன், மாநில அமைப்பு செயலாளர் ஜெயகோபி, மாநில துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். தமிழக அரசு 2007-ம் ஆண்டு வெளியிட்டுள்ள மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப வாரிசு சான்றிதழ், சொத்து சான்றிதழ், பிறப்பு- இறப்பு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமண சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்