அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 4 பேர் மீது வழக்கு

திருமருகல் அருகே அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 4 பேர் மீது வழக்கு

Update: 2023-07-02 18:45 GMT

திட்டச்சேரி;

திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி கீழப்பாக்கத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, கவர்ச்சி உடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி உரிய அனுமதியின்றி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஊர் பிரமுகர்கள் 4 பேர் மீது திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்