அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-07-06 22:47 GMT

கடத்தூர்

அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தையும், குதிரை சந்தையும் நடக்கிறது. பின்னர் 16-ந் தேதி பால்பூஜை நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி கூறினார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், போலீசார், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத்துறையினர், கால்நடை பராமரிப்புத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்