ஊத்தங்கரையில் வாகனம் மோதி எறும்புத்தின்னி காயம்தீயணைப்பு படையினர் மீட்டு காட்டில் விட்டனர்

Update: 2023-09-12 19:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை மின்வாரிய அலுவலகத்தின் எதிரே சாலையோரம் வாகனம் மோதி எறும்புத்தின்னி காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ரத்த காயத்துடன் இருந்த எறும்பு தின்னியை மீட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் அதை திப்பம்பட்டி ஒன்னகரை காப்புக்காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்