மினிலாரி மீது மற்றொரு லாரி மோதல்

பணகுடியில் மினிலாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-04-01 18:47 GMT

பணகுடி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து நெல்லை நோக்கி டிப்பர் லாரி ஒன்று நேற்று பகலில் வந்து கொண்டு இருந்தது. கிளாக்கல் விளையை சோந்த ரெஜிஸ் (வயது 28) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

பணகுடி முத்துசாமிபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் வரும்போது டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காலி கியாஸ் சிலிண்டருடன் நின்ற மினிலாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காலி கியாஸ் சிலிண்டர்கள் சாலையோரத்தில் விழுந்து சிதறியது. மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இந்த விபத்தின் போது அருகே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்