கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல்5 பேர் பலியான இடத்தின் அருகே நடந்த விபத்து

நாட்டறம்பள்ளியில் 5 பேர் பலியான இடத்தின் அருகே லாரிகள் மோதிக்கொண்டன.

Update: 2022-06-21 18:38 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியில் 5 பேர் பலியான இடத்தின் அருகே லாரிகள் மோதிக்கொண்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பனூர் கந்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மகன் பிரான்ஸ் (வயது 41) லாரி டிரைவராக உள்ளார். நேற்று வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பிரான்ஸ் ஓட்டிச் சென்ற லாரி மோதியது.

இதில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து லாரி இடிபாடுகளில் டிரைவர் பிரான்ஸ் படுகாயங்களுடன் சிக்கிக்கொண்டார். தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி டிரைவர் பிரான்சை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதியதில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே நாட்டறம்பள்ளி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்