ஐ எப் எஸ் நிதி நிறுவன மோசடியில் முக்கிய தரகராக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Update: 2023-04-27 11:04 GMT

காஞ்சிபுரம்,

கடந்த 2018 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகளாக சுமார் 84 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்த ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது மொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிறுவனத்திற்கு 5 துணை நிறுவனங்களும், 10 இயக்குநர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படது. இந்த மோசடி வழக்கில் முக்கிய தரகராக செயல்பட்ட மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்த பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. கைதான வெங்கடேசனிடம் இருந்து ஒரு சொகுசு கார் மற்றும் ரூ.2.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெங்கடேசனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது போலீசார் கைதுசெய்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்