புகையிலை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
தாழையூத்து பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
நெல்லை தாழையூத்து நாஞ்சாங்குளம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி தாழையூத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டையுடன் நின்றிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் (வயது 26), பாஸ்கர் (29), நவநீதகிருஷ்ணன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ புகையிலை பொருட்கள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பீமராஜ் (42) என்பவரை தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.