மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் சாவு

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் இறந்தார். மற்றொரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-23 21:05 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் இறந்தார். மற்றொரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுவில் சானிடைசர் கலந்து குடித்தனர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 48), கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(43), ராம்நகரை சேர்ந்த முருகன்(45), துக்காம்பாளைய தெருவை சேர்ந்த ஜெயகிருஷ்ணா(30).கூலி தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும் கடந்த 20-ந் தேதி இரவு காவிரி படித்துறையில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்கள் அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததாக தெரிகிறது.

மேலும் ஒருவர் சாவு

நேற்று முன்தினம்(22-ந் தேதி) காலையில் பாலகுரு, சவுந்தரராஜன் ஆகிய இருவரும் காவிரி படித்துறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.இவர்கள் இறப்பதற்கு முந்தைய நாளே முருகன் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். 4 பேரில் உயிர் தப்பிய ஜெயகிருஷ்ணா வயிற்று வலி காரணமாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசாா் நடத்திய விசாரணையில்தான் 4 பேரும் சேர்ந்து மது குடித்ததும், அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததும் தெரிய வந்தது.இதன்மூலம் மதுவில் சானிடைசர் கலந்து குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்து உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்