விவசாயி கொலை வழக்கில் மற்றொரு தம்பியும் கைது
வள்ளியூர் அருகே விவசாயி கொலை வழக்கில் மற்றொரு தம்பியும் கைது
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே வடக்கு ஆச்சியூரைச் சேர்ந்த கந்தையா மகன்கள் நம்பிராஜன் (வயது 55), சுப்பையா என்ற மணி (50), ஆறுமுகவேல் (45). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அதில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக நம்பிராஜனுக்கும், ஆறுமுகவேலுக்கும் இடையே கடந்த 3-ந்தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது நம்பிராஜன் அரிவாளால் ஆறுமுகவேலை வெட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகவேல், சுப்பையா என்ற மணி ஆகிய 2 பேரும் நம்பிராஜனை மண்வெட்டியால் தாக்கினர். இதில் நம்பிராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆறுமுகவேலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுப்பையா என்ற மணியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.