தேரழுந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு 108 இளநீரால் அபிஷேகம்
அக்னி நட்சத்திரம் பூர்த்தியையொட்டி தேரழுந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு 108 இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் வடிவாக விநாயகர் கோவில் இங்கு மட்டுமே அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் அக்னி நட்சத்திரம் பூர்த்தியையொட்டி நேற்று முன்தினம் மும்மூர்த்தி விநாயகருக்கு 324 இளநீர்களால் அபிஷேகம் (ஒவ்வொரு விநாயகருக்கும் 108 இளநீர்), 51 லிட்டர் பால் மற்றும் 20 லிட்டர் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுவாமிராஜா குருக்கள் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.