எஸ்.குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆண்டு விழா
எஸ்.குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆண்டு விழா
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையம் டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளியில் 80-ம் ஆண்டு விழா, அமுத விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்கு தலைவர் சாவித்திரி கனகராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பால் அருள்தாஸ் வரவேற்றார். கொடுக்கும் கரங்கள் என்ற புரவலர் திட்டத்தை தொடங்கி வைத்து சுல்தான்பேட்டை வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் விளையாட்டு, கலை மற்றும் இலக்கிய போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். முடிவில் உதவி ஆசிரியர் சாந்தி ஜான்சி பாய் நன்றி கூறினார். இதில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.