நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி துறையூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிலவு சிவராமன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகானந்தம் வரவேற்றார். இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் விஜயரங்கன், பாலசுப்பிரமணியன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பாரதி அம்மாள் நன்றி கூறினார்.