கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

தற்போது மலர்ச்செடிகளில் பல்வேறு வகையான லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2023-05-12 12:31 GMT

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கொடைக்கானலில் விரைவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது

இதனை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற பிரையண்ட் பூங்காவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே மலர்ச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மலர்ச்செடிகளில் பல்வேறு வகையான லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

இந்த நிலையில் கொடைக்கானலில் வரும் மே26, 27, 28ம் தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரையண்ட் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்