ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. நாங்குநேரி வட்டார கல்வி அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார். சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரி வரவேற்றார். ஆசிரியர் ஏஞ்சல் ஆஷா ஞானமலர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஊராட்சி செயலர் முருகன், டி.வி.எஸ். அறக்கட்டளை உஷா, வித்யாரம்பம் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி, சாந்தகுமாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். பரிசுகளை பஞ்சாயத்து தலைவர் வழங்கினார். முடிவில் ஆசிரியர் ராதா லட்சுமி நன்றி கூறினார்.