ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2022-06-24 20:12 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் 93-வது ஆண்டு ஆனி தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடைகளும் நடத்தப்பட்டது. பின்னர் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டையாடுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் நாளான 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்