அண்ணா பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-09-15 18:45 GMT

காரைக்குடி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்த நாள்

அண்ணா பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு அசோகன். காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரை, நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் ஆதி கண்ணாத்தாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, நகர செயலாளர் மெய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் தேவன், பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க.

ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், அ.ம.மு.க.வினரும் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அங்குராஜ், மாவட்ட துணை செயலாளர் ராமாமிர்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கணேசன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, காரைக்குடி தெற்கு நகர செயலாளர் கார்த்தி, வடக்கு நகர செயலாளர் அஸ்வின், மாநில பொறியாளர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் மரியாதையை செலுத்தினர்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க. சார்பில் மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் சிற்பி சேது தியாகராஜன், மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அண்ணா தமிழ் கழகத்தின் சார்பில் நிறுவன தலைவர் கதிர்வேல், செயல் தலைவர் பொன்துரை, செயலாளர் முத்தையா, திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் வைகறை, நகர செயலாளர் கலைமணி, பகுத்தறிவாளர் கழக தலைவர் முழுமதி ஆகியோர் மரியாதையை செலுத்தினர்.

திருப்புவனத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாவட்ட துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிய தமிழக அரசை பாராட்டி இந்திராநகர் காலனியில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றதையும் கட்சியினர் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்