ஈரோட்டில், அண்ணா பிறந்தநாள் விழா: பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில், அண்ணா பிறந்தநாளையொட்டி அவருடைய உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2023-09-15 21:07 GMT

ஈரோட்டில், அண்ணா பிறந்தநாளையொட்டி அவருடைய உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணா பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராஜ், கந்தசாமி, சந்திரகுமார், சச்சிதானந்தம், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், பழனிசாமி, சின்னையன், செல்லப்பொன்னி, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் மணிராசு, மகளிரணி நிர்வாகிகள் திலகவதி, கனிமொழி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம், துணை மேயர் செல்வராஜ், பகுதி செயலாளர் ராமச்சந்திரன், விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அ.தி.மு.க.

இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் மனோகரன், பழனிச்சாமி, ஜெகதீஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரை சக்திவேல், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் ஜீவா ராமசாமி, இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், மாணவர் அணி தலைவர் சி.எஸ்.சிவக்குமார், பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, முருகானந்தம், இளைஞர் அணி பகுதி செயலாளர் கேபிள் ரமேஷ், மாநகர பிரதிநிதி ஆஜம், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், சூரியசேகர், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ரா.மயில்துரையன், தொழிற்சங்க செயலாளர் ஆர்.கே.எஸ்.குமார், மகளிர் அணி தலைவி எஸ்.சத்யா நிர்வாகி ஏ.காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்