அண்ணா பிறந்தநாள் விழா ெபாதுக்கூட்டம்
அண்ணா பிறந்தநாள் விழா ெபாதுக்கூட்டம்
திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கட்சி அமைப்பு செயலாளர் ஆசைமணி, தலைமை பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில்பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், அண்ணா பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார். முன்னதாக ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.