சிறுபாக்கம் பிச்சாண்டவர் கோவிலில் அன்னபடையல் திருவிழா

சிறுபாக்கம் பிச்சாண்டவர் கோவிலில் அன்னபடையல் திருவிழா நடந்தது.

Update: 2023-04-19 18:45 GMT


சிறுபாக்கம், 

சிறுபாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசை அன்று அன்னபடையல் திருவிழா நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் பிச்சாண்டவர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னபடையல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாலையில் கோவில் வளாகத்தில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்