சிறுபாக்கம் பிச்சாண்டவர் கோவிலில்அன்னபடையல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிறுபாக்கம் பிச்சாண்டவர் கோவிலில் அன்னபடையல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் கிராமத்தில் பிரசித்திபெற்ற பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை அன்று அன்னபடையல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, இரவு பிச்சாண்டவர் சாமிக்கு, பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து அன்ன படையல் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.