பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி சமூக நீதியை காக்கும் கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது- அண்ணாமலை

பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி சமூக நீதியை காக்கும் கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது என அண்ணாமலை கூறினார்.

Update: 2022-06-15 11:28 GMT

நீடாமங்கலம்:-

பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி சமூக நீதியை காக்கும் கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது என அண்ணாமலை கூறினார்.

பா.ஜனதாவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் பா.ஜனதா கட்சியில் இணையும் விழா நடந்தது. விழாவிற்கு கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வம், செந்தில்அரசன், ராஜேந்திரன், சித்தமல்லி ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கேபினட்டில் சாதாரண பொறுப்புகளை மட்டுமே வழங்குவதை முன்பு வாடிக்கையாக வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கி உள்ளார். ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கி உள்ளார்.

சமூக நீதி

சமூக நீதியை காப்பாற்றும் கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது. தமிழகத்தில் சமூக நீதி பற்றி தி.மு.க. பொய் பேசி வருகிறது. பட்டியலின மக்களுக்கு பா.ஜனதா செய்தவற்றை தொடர்ந்து பேசி வருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அவரை இந்திய அரசியல் சாசன தலைவராக பரிந்துரை செய்தது ஜன சங்கம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில நிர்வாகிகள் கண்ணன், காமராஜ், பெரோஸ்காந்தி, சந்துரு, பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்