அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது -வைகோ பேட்டி

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Update: 2023-04-16 23:40 GMT

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் முதல் நாள் ஒன்று சொல்கிறார் மறுநாள் அதை மறுத்து பேசுகிறார். முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேச வேண்டிய நிலைமை கவர்னருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று பேச ஆரம்பித்தவர் கடைசியில் இந்தியால் தமிழை ஒன்றும் செய்து விட முடியாது என்று பேசுகிற நிலைமைக்கு வந்திருக்கிறார்.

அதுபோல பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஒன்று பேசுகிறார் யாரைப் பற்றி பேசுகிறார் என தெரியவில்லை. அவரால் எதையும் நிரூபிக்க முடியாது.

திராவிட மாடல்

தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களின் செல்வாக்கு, பேராதரவு இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுக்குழு முடிந்த பின்பு எனது திட்டம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்