மருத்துவத்துறை மீது அண்ணாமலை குற்றசாட்டு: நிரூபிக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக தலைவா் அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தாா்.

Update: 2022-06-05 09:53 GMT

சென்னை,

கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக தலைவா் அண்ணாமலை கூறிய குற்றசாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்தாா்.

இதுதொடர்பாக சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்திற்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அது இறுதி ஆகவில்லை. அதற்குள் அதில் இழப்பு என கூறுவது எந்த வகையில் நியாயம். இந்த குற்றச்சாட்டை அவா் நிரூபிக்க வேண்டும்.

டெண்டா் விடப்பட்டு அதை யாருக்கும் கொடுக்காத நிலையில், டெண்டரை இந்த நிறுவனங்களிடம் கொடுத்திருந்தால் 48 கோடி மிச்சமாகி இருக்கும் என கூறுவது எந்த வகையில் நியாயம் என தொியவில்லை.

இந்த குற்றசாட்டு குறித்து அதிகாாிகளிடம் கேட்ட போது டெண்டா் இன்னும் இறுதியாக வில்லை. எனவே இதில் எவ்வாறு இழப்பு ஏற்படும் என தொிவித்தனா். இதற்கு அண்ணாமலை தான் விளக்கம் தர வேண்டும். எந்த நிறுவனத்திற்கு டெண்டா் கொடுத்தால் லாபம் வரும், எந்த நிறுவனத்திற்கு கொடுத்தால் நஷ்டம் வரும் என்பதை அவா் கூற வேண்டும்.

உண்மையாக இந்த விசயத்தில் தவறு நடந்திருந்தால் அவற்றை சாிசெய்ய துறை தயாராக உள்ளது. டெண்டா் இறுதி ஆகாத போது எந்த வகையில் இழப்பு ஏற்பட்டது என அவா் தொிவிக்க வேண்டும். இதனை நிருபர்கள் அவாிடம் கேட்க வேண்டும். இதற்கு அவா் பதில் சொல்லவில்லை என்றால் மற்ற துறைகள் மீது அவா் கூறும் புகாாில் உண்மை தன்மை இல்லாதது நிரூபணம் ஆகும்.

ஆவினில் வாங்க கூடிய பொருட்களை அங்கு தான் வாங்குகிறோம். இரும்புசத்து மருந்துகளை வெளியில் இருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும். இதனை ஆவினில் வாங்க முடியாது. ஊழல் நடந்ததற்கான ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாா்" என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்