அன்னை சத்யா நகர் பகுதியில்வீடு வீடாக சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குசேகரிப்பு; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-02-09 20:56 GMT

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் கேட்டு அமைச்சர்கள் பலரும் வீதி வீதியாக சென்று வருகிறார்கள்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பி.பி.அக்ரகாரம் அன்னை சத்யா நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். ஈரோடு சட்டமன்ற தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா செய்த பணிகள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்களின் மேம்பாட்டுக்காக செய்து வரும் திட்டங்கள், மகளிர், மாணவிகளுக்கான திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார்.

ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அங்கு இருப்பவர்களிடம் நலம் விசாரித்து, அவர் கை சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றனர். ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வீடுகள் மட்டுமின்றி, அங்குள்ள காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குகள் சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்