கூடைப்பந்து போட்டியில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி 2-ம் இடம்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்தது.

Update: 2023-10-18 17:50 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் வேலூர் மண்டல அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் கூடைப்பந்து அணிகள் கலந்துகொண்டன.

போட்டியில் சி.எஸ்.இ. பிரிவு இறுதியாண்டு மாணவர் சுபாஷ் தலைமையிலான அன்னை மிரா பொறியியல் கல்லூரி கூடைப்பந்து அணி 2-ம் இடம் பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளருமான ஜி.தாமோதரன், ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலஅலுவலர் எஸ்.ஞானசேகரன், வேலூர் மாவட்ட கூடைப்பந்து அமைப்பின் தலைவர் கனகராஜ், செயலாளர் ஜெயசந்திரன், சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலகணேசன் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்திய கல்லூரி கல்வி இயக்குனர், முதல்வர், துணை முதல்வர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர், உடற்கல்வி இயக்குனர் எம்.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்