நெல்லை டவுனில் அன்னதானம்

நெல்லை டவுனில் அன்னதானம் நடைபெற்றது.

Update: 2023-06-17 19:17 GMT

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழாவையொட்டி, நெல்லையப்பர் கோவிலுடன் இணைந்து டவுன் சத்தியமூர்த்தி தெரு எஸ்.எஸ்.எப். ஹாலில் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 21-ந்தேதி வரை மதியம் 12.30 மணி அளவில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மானூரில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மேலிட தொகுதி பார்வையாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்