ஐப்பசி மாத பவுணர்மியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்

ஐப்பசி பவுணர்மியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

பொள்ளாச்சி

ஐப்பசி பவுணர்மியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி

ஐப்பசி மாத பவுணர்மியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ஐப்பசி பவுணர்மியையொட்டி ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிவனுக்கு சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவிலில் உள்ள சிவப்பெருமானுக்கும், கரப்பாடி அமணீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோட்டூர் ரோடு காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சிவப்பெருமானுக்கு பவுணர்மியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சாமி கோவிலில் உள்ள காசி விஸ்வநாதருக்கு ஐப்பசி பவுணர்மியையொட்டி அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று கிணத்துக்கடவில் உள்ள சிவலோகநாதர் கோவிலில் 100 கிலோ அரிசி சமைக்கப்பட்டு சிவலோகநாதருக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவலோகநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெகமம்

தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்