100 மூட்டை அரிசியை சமைத்து அன்னாபிஷேகம்
100 மூட்டை அரிசியை சமைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர் கோட்டை பிரம்மேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கடந்த 5-ந்் தேதி காலை விநாயகருக்கு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள், பிரம்மேஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று 100 மூட்டை பச்சரிசியை சமைத்து பிரம்மேஸ்வரர் சிவலிங்கத்திற்கு அலங்காரம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பலகாரங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. இரவில் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதம் உள்ள அன்னத்தை குளத்தில் உள்ள மீன்களுக்கு போடப்படும். இன்று சந்திர கிரகணத்தை ஒட்டி காலை 10.30 மணிக்கு மேல் ருத்ர அபிஷேகம், சண்டிகேஸ்வரர் பூஜை நடைபெறுகிறது. இதே போல பழமை வாய்ந்த மடவாளம் அங்கநாத ஈஸ்வரர், கொரட்டி ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.