கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை.பிறப்பித்த உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை என நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நான்கு வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.