அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க. பிரமுகர் சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க. பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-05 18:45 GMT


விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிஞர் அண்ணாவின் சிலையை சிலர் அவமதிப்பு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விடுவித்ததாக தி.மு.க.வை சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய பிரமுகர் ஒருவர், வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அண்ணாவின் சிலையை அவமதித்தவர்களை விடுவித்ததற்கு காரணம் என்ன? நாங்கள் ஆளுங்கட்சி என்பதால் அமைதியாக இருந்தோம், சர்வாதிகாரமாக நடக்கிறது போலீஸ் என ஆவேசமாக பேசினார். அதற்கு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைதியாக பேசும்படியும் கூறினார். அதற்கு நீ யார் என்று அப்பிரமுகர் கோபமாக பேசியுள்ளார். மேலும் அவருடன் வந்த தி.மு.க.வினரும் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்