அன்ன சாய்பாபா கோவில் 7-ம் ஆண்டு தொடக்க விழா

அன்ன சாய்பாபா கோவில் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2023-05-10 19:28 GMT

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள புங்கனூரில் அன்னசாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் 7-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து சாய்பாபா பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்