அண்ணா மறுமலர்ச்சி கிராம வேளாண்மை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
சீர்காழி வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி கிராம வேளாண்மை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
திருவெண்காடு:
சீர்காழி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாணகிரி, தென்னாம்பட்டினம், புதுத்துறை, செம்மங்குடி, தில்லைவிடங்கன், அத்தியூர், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் மற்றும் கன்னியாகுடி ஊராட்சியில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. தென்னம்பட்டினம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சரளா, ஒன்றிய கவுன்சிலர் நிலவழகி, வேளாண்மை துணை இயக்குனர் (விதைஆய்வு) சித்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். இதற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், விசை தெளிப்பான் மற்றும் விதைப்பு கருவி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் வேதைராஜன் நன்றி கூறினார்.