அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

ரங்கப்பனூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-17 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பனூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜர் தலைமை தாங்கினார். சங்கராபுரம் ஒன்றிய பொறியாளர் ஹரிகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அயுப்கான், ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலைகோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் வரவேற்றார். இதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்