அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பிற துறை பணிகள் ஒருங்கிணைத்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகள் குறித்து கூறினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிபட்டி கிராமத்திலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.