அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்

பெரும்பத்து பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடந்தது

Update: 2022-11-04 18:45 GMT

கடையம்:

கடையம் யூனியனில் பெரும்பத்து பஞ்சாயத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவி பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவரதன், மாவட்ட நிதி சார் கல்வி ஆலோசகர் இளங்கோ, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர் பயிற்றுனர் சுப்பு, சிறப்பு பயிற்றுனர்கள் முருகலட்சுமி, அலிஸ்டெல்லா, வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, வட்டார வள பயிற்றுனர் (மகளிர் திட்டம்) தங்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை காந்தி கிராம சாந்தி செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்