பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நாளைஅண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை நடைபெறுகிறது, என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை நடைபெறுகிறது, என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள்
பாளையங்கோட்டை யூனியன் உடையார்குளம் ஊராட்சி மன்ற கட்டிடத்திலும், மானூர் யூனியனில் மேலஇலந்தைகுளம் ஊராட்சியில் அங்குள்ள நூலக கட்டிடத்திலும், நாங்குநேரி யூனியன் சிங்கநேரி ஊராட்சி சமுதாய நல கூடத்திலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாதி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, நில தாவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் துறையில் மற்றும் இதர துறையில் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.