அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
ஏமன்குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்குளத்தில் வருவாய்த் துறையினரால் நடத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது. இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா தலைமை தாங்கினார். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, ஊராட்சி துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாங்குநேரி தனி திட்ட தாசில்தார் தங்கராஜ், மண்டல துணை தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் நம்பி, கிராம உதவியாளர் வானமாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.