கால்நடை தடுப்பூசி முகாம்
குத்தாலம் அருகே கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் கால்நடைகளுக்கு தோல் கடலை நோய் தடுப்பூசி முகாமானது நடைபெற்றது. இதில் தேரழுந்தூர் கால்நடை உதவி டாக்டர் ஜனார்த்தனன், கால்நடை ஆய்வாளர் கயல்விழி மற்றும் பராமரிப்பு உதவியாளர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனைகளை வழங்கினர். அசிக்காடு ஊராட்சியில் நான்கு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அசிக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.