கடலூாில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

கடலூாில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-12 18:45 GMT

கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி, கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு கடலூர் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் பாபு, கணேசன், கலீல் ரகுமான், மகளிரணி சத்தியபாமா, காந்திமதி, மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை முன்னாள் மாநில தலைவர் சிவராமன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர்கள் (விழுப்புரம்) துரைராஜ், முரளி கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பாவாணன், அரசு ஊழியர் சங்கம் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், பாரத் கருணாநிதி மற்றும் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாநில தணிக்கையாளர் தேவநாதன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் வட்ட செயலாளர் ராஜமகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்