கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
வெங்கிடங்கால் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறது. அதன்படி கீழ்வேளுர் ஒன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.