கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கொத்தமங்கலம் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-12-07 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பெரோஸ் முகமது, பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை ஆய்வாளர் பாரிவேந்தன், பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணகுமார், சிவராணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜோதி, ஊராட்சி செயலாளர் பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்