செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா

திருமருகல் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா

Update: 2023-07-12 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் மற்றும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலா நேற்று முன்தினம் நடந்தது. இதில் செல்வமுத்து மாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெரியாட்சி அம்மனுக்கு படையல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்ககள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்