வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா
சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
சாத்தூரில் பழமை வாய்ந்த சாத்தூரப்பன் என்ற வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவினையொட்டி சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி காலை நடைபெறுகிறது. 4-ந் தேதி வெற்றிவேர் சப்பரத்தில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.