வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் வீசப்பட்ட ஆஞ்சநேயர் சிலை
வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் வீசப்பட்ட ஆஞ்சநேயர் சிலை வீசப்பட்டது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள யானைகால் தொட்டி மேம்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் சென்றனர். அப்போது நாச்சிகுப்பம் குப்தா ஆற்றில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பக்தர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். தகவல் அறிந்்து வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் கிடந்த சிலையை மீட்டு சென்றனர். இந்த சிலையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் ஆஞ்சநேயர் சிலை வீசப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.