வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம்:தனியார் நிறுவன அதிகாரியை வெட்டியவர் கைது
வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவன அதிகாரியை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி தாகூர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). இவர் மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள பர்னிச்சர் கம்பெனியில் விற்பனை பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இங்கு கூடல்புதூர் ஆனையூரை சேர்ந்த தியாகராஜன் (33) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரது வேலையில் திருப்தி இல்லாததால் அவரை பாஸ்கர் வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன் சம்பவத்தன்று கம்பெனிக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.