கருப்பு பட்டை அணிந்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பட்டை அணிந்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் அண்ணா சிலை அருகே அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கும், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராமப்புற செவிலியர் பதவி உயர்வை வழங்க வேண்டும், உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.