அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-19 18:36 GMT

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொருளாளர் தேவமணி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிமாறுதல் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், குழந்தைகளின் நலன்கருதி பள்ளி, கல்லூரி போல அங்கன்வாடி மையத்திற்கும் மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்